உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 137 “தாமரையைப் போலொருத்தி நெஞ்சில் நெஞ்சைத் தளைப்படுத்திக் கிடப்பதுவே இன்ப மாகும்! கோமகனய்ப் பிறந்தாலும் காதல் நெஞ்சில் குடியிருக்கும் பேறின்றேல் துன்ப மாகும்! தேமதுர வாய்மொழியும் அன்பு பாய்ச்சும் திருவிழியும் துணையிருந்தால் சுவைக்கும் வாழ்வு! பூமலரை நாடாத வண்டு தேனின் புதுச்சுவையைப் பழிப்பதிலே பொருளுமுண்டோ? எவ்வுயிரும் இன்பமுற வாழ்க வென்றே இவ்வுலகைப் படைத்தவனும் ஆணும் பெண்ணும் செவ்வியராய் வாழ்கவெனக் காதல் என்னும் சிறப்புடைய பாகத்தை இடையில் வைத்தான்! அவ்வை திரு வள்ளுவர்போல் அறிஞ ரெல்லாம் அருமையுடன் காதலையே பாடி யுள்ளார் இவ்வையத் தின்பத்தைக் காதல் என்னும் இன்னமுதை வெறுப்பவர்கள் அறியா தாரே! சிரிக்கின்ற மங்கையவள் தொட்டால் இன்பம் சிரித்தபடி பார்த்தாலும் அதுவே இன்பம் அரிக்கின்ற உலகத்துக் கவலை யெல்லாம் அவள் மடியில் தலைவைத்தால் அகன்று போகும் விரிக்கின்ற இதழாலே வண்ட ழைத்து விரும்புமட்டும் தேனுண்ணச் செய்யும் பூப்போல் சுரிக்கின்ற கருங்கூந்தல் துணையி ளுலே சுகமுண்டு பயனுண்டு மனிதர்க் கெல்லாம்! அழகுமகள் தாமரையைக் காத விக்கும் அன்புடையான் பொன்னப்பன் கூற்றைக் கேட்டுப் பழகுமுயர் முத்தப்பன் மறுத்து ரைப்பான் பாசமுள்ள நண்பர்களும் ஏசிக் கொள்வார்,