உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நாச்சியப்பன் கழகத்துப் புலவர்களின் சண்டை யெல்லாம் கருத்தளவே நிற்பதுபோல் நண்பர்க் குள்ளே எழுகின்ற வாய்ப்போரும் நின்று போகும்! என்றும் போல் அன்புடனே ஒன்றி வாழ்வார். முத்தப்பன் பொன்னப்பன் வீட்டை நோக்கி முகந்தொங்கப் போட்டபடி ஒருநாள் சென்ருன் எத்தை நீ நினைத்தபடி வருந்து கின்ருய்! எனக் கேட்டான் பொன்னப்பன், குரலி றங்க 'சித்தத்தைத் தேற்றிக் கொள் நண்பா, நானும் செல்லுகின்றேன். தஞ்சைக்கு, மீண்டும் உன்னை எத்தினத்தில் காண்பேனே தெரியா தப்பா இனிமேல் நான் அங்கேதான் இருப்பேன்’ என்ருன். “இங்கென்ன குறைச்சல் நீ தஞ்சைக் கேகும் எண்ணத்தைக் கைவிடுவாய்; என்னைக் கான திங்கிருக்க முடியாது; நண்பா உன்னை எப்படி நீ பிரிந்திருக்கத் துணிந்தாய்?’ என்றே அங்கந்தப் பொன்னப்பன் துயர நெஞ்சை அகலத்தான் திறந்து வைத்தான்; அதனைக் கேட்டுத் தங்கத்தை யொத்தகுண முத்தப் பன்தன் தடுமாற்றம் மறைத்தங்கே கூறு கின்ருன்! “தாமரையைத் துணையாகப்பெற்றி ருந்தும் தவிக்கின்ருய் வியக்கின்றேன் உன்றன் நட்பை: மாமனுக்குத் தஞ்சை நகர் மன்னர் நண்பர்; மன்னருக்கு மெய்த்துணைவன் ஒருவன் வேண்டும்; தாமதங்கள் செய்யாமல் வருக வென்று தந்தைக்கு வந்ததொரு செய்தி; இன்றே கோமகனின் தஞ்சைக்குப் புறப்ப டென்று குதிக்கின்ருர் விதிக்கின்ருர் கட்ட ளைகள்: