உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 139 "மன்னருக்குப் பணியாளாய்ப் போவதாலே மதிப்புயரும்; வாணிபத்தில் வளர்ச்சி தோன்றும் என்னருமைத் தந்தை மனக் கருத்துக் கொப்ப எதிர்பேசா தேகுவதே என்றன் தொண்டாம்! வன்னமயில் தாமரைக்கென் வாழ்த்தைக் கூறு; வரைந்தோலை யனுப்பிடுவேன் பதிலைப் போடு: பொன்னகரம் போனலும் உன்னைத் தேடும் பொதுநட்பை எந்நாளும் மறவேன்” என்ருன் முத்தப்பன் தஞ்சைக்குப் போன பின்னே முழுப்பொழுதும் நகராமல் தேங்கித் தேங்கிச் சத்தற்று நடக்கின்ற நிலைமை கண்டு தனியிருந்த பொன்னப்பன் பித்த னைன் முத்துப்பல் தாமரையின் உருவை நெஞ்சில் முன்னிறுத்தி ஒருகாதல் பாவ ரைந்தே உத்தமியாம் பணிப்பாவை யொருத்தி கையில் ஒப்படைத்தான் பதில்கருதிக் காத்தி ருந்தான். அன்புடையான் கொடுத்தமடல் வாங்கிப் பார்த்தாள் அகமலர்ந்து பரிசுபல தருவா ளென்றே தன்பங்கில் எண்ணிநின்ருள். வேலைக் காரி தடிப்பயல்கள் கொடுப்பதெல்லாம் வாங்கி வந்தா என்னிடத்தில் தருகின்ருய்?’ என்று கூறி எடுத்துவந்த கடிதத்தைக் கிழிந்தெ றிந்தாள். "துன்பமிது துன்பமிந்த வேலை யென்று சொல்லியந்தப் பணிப்பாவை போய கன்ருள். பணிப்பாவை தலை மறைந்த கணமே கையால் பத்துமுறை கிழித்தெறிந்த துண்டை யெல்லாம் இணைத்தெடுத்துப் படித்தாள்தன் காதல் நெஞ்சில் இருப்பவனின் இதயத்தை எழுத்திற் கண்டாள்.