உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நாச்சியப்பன் அணைத்தபடி, பூஞ்சோலைப் புதரின் பின்னே அளிக்கின்ற முத்தத்தைப் பெறுக வென்றே இணைத்திருந்த துண்டெல்லாம் எடுத்தெ டுத்தே இச்சிட்டாள் அச்சிட்டாள் நகைத்திட் டாளே! 'நாடோறும் காணுத கார ணத்தால் நானிங்குப் பித்தேறி வாழு கின்றேன் வீடோமுட் காடாகி நெஞ்சைக் குத்தும். வேதனையைத் தாங்குகிலேன் அன்பே சோலைக் கோடோடி வருவாய் இம் மாலைப் போதில் உனக்காகக் காத்திருப்பேன் என்றன் காதல் சூடோடப் பணி முத்தம் நல்க வாராய் சுடர்க்கொடியே” என்றுரைத்த தம்மு டங்கல்! 'சந்திக்கச் சந்திக்கக் காதல் ஊறும் சத்தான முத்தங்கள் இதழ்கள் மாறும் சிந்திக்க சிந்திக்க அன்பு மீறும் சிறு குழந்தைத் தனமாகப் பின்பு மாறும் விந்தைக்குள் விந்தையெனச் சுவைகள் சேரும் வேடிக்கைப் பேச்சுக்கள் வளர நேரும் அந்திக்கு வருவேன் என் அன்பே பாரும் யாருக்கும் தெரியாமல் சோலை வாரும்!” என்றேதன் நெஞ்சத்தில் எழுந்த தெல்லாம் எழுதியபெண் தாமரையாள் வேலைக் காரி முன்னே சென் றவள்கையில் முடங்கல் வைத்து முகங்கடுத்த பாவனையாய்ச் சொல்லு கின்ருள் உன்னிடத்தில் இக்கடிதம் கொடுத்த வன்பால் உடன்சென்று கொடுத்திடுவாய் முடங்கல் ஒன்றை இன்னெருகால் எழுதுதற்கும் எண்ண வேண்டாம் என்றவனை எச்சரித்து வருவாய் என்ருள்!