உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 141 'என்னெதிரில் அவள் கடிதம் கிழித்துப் போட்டாள்; இப்பொழுதோ அதைமறந்து திருப்பு தல் போல் தன்னெழுத்தை என்னிடத்தில் தந்து போக்கும் தந்திரத்தை அறியேனென் றெண்ணி யிந்த அன்னமயில் நடக்கின்ருள்; பருவம் செய்யும் ஆட்சியிலே இயங்குகின்ற பாவை, பேதை இன்னமுத வாழ்வடைய உதவு வே' னென் றெண்ணமிட்டுப் பணிமங்கை ஏந்திச் சென்ருள். பொன்னப்பன் இம்முடங்கல் பெற்ற டைந்த பூரிப்பை இன்னதென்று விளக்கப் போமோ அன்னப்பெண் தாமரையின் எழுத்தொவ் வொன்றும் ஆயிரம்தேன் குடத்திற்கு நிகராம் என்றே உன்னிப்பல் வாருக உவக்கும் போதில் உள்நுழைந்த தந்தையதைக் கண்டு விட்டார் 'என்னப்பா முடங்கலிது குதிக்கின் ருயே யாரெழுதி யனுப்பியதோ?’ என்று கேட்டார். உள்ளமுவப் பாகுமொரு காதல் நங்கை உயிர்மொழியில் எழுதியதாம் முடங்கல் என்றே கள்ளமின்றித் தந்தையிடம் சொல்லப் போமோ காதலெனில் தீதென்றும் ஒழுக்கங் கெட்ட பள்ளென்றும் கருதுகின்ற பான்மை கொண்டார்; பற்பலவாய்ச் சினந்திடுவார்’ ஆதலாலே சுள்ளென்று முத்தப்பன் ஒலை யென்றே சுவையாகப் பொய் கூறித் தப்பித் தானே! 'முத்தப்பன் பொன்னை பிள்ளை! அங்கே முழுநலத்தோ டுள்ளான? வேறு செய்தி சத்தாக என்னென்ன எழுதி யுள்ளான்? சாற்”றென்று கேட்டங்கே அமர்ந்து கொண்டார்