உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i42 நாச்சியப்பன் “மொத்தத்தில் நலந்தானும் தஞ்சை மன்னர் முழுஅன்பும் இவன் பேரில் தானும் வாழ்க்கை மெத்த சுவை என்ருலும் நானில் லாமல் மிகக்குறையாய் உள்ளது.வாம்’ என்று சொன்னன். தாமரைக்குப் பக்கத்தில் தானில் லாமல் தளிர்க்கொடியாள் குறைப்படுமோர் செய்தி தன்னை மேல் மறைத்து முத்தப்பன் பெயரைக் கூறி மிகத்திறமாய்ப் பொய் சொன்னன் வணிகர் மைந்தன் “ஆமவனுக் குனேவிட்டால் பொழுது போக அயலூரில் உயிர்நண்பர் யார்கி டைப்பார்? போய் மனத்துக் குவந்தவனே டிருந்து சின்னுள் பொழுதுகழித் திடுவாய் நீ’ புறப்ப டென்ருர், 'உள்ளுருக் குள்ளேயே வாழ்வை ஒட்டி உட்கார்ந்து கொண்டிருந்தால் உலக ஞானம் தெள்ளியதாய் வளராதென் றறிஞர் சொல்வார் திருநாடு முழுவதுமே சுற்றி வந்தால் வள்ளுவரைப் போலறிஞர் ஆக லாகும் வளஞ்சேர்க்கும் வாணிபத்தின் திறமை சேரும் உள்ளந்தான் விரிவாகும் ஆத லாலே உடனே நீ புறப்படுவாய்!! என்று ரைத்தார். நினைத்ததொரு செயல்நடக்க வேண்டு மென்று நெஞ்சாரப் பொய்சொல்லும் மனித ரெல்லாம் தினைத்துணையும் பயன் நல்காப் பொய்யை நாளும் திறமாகப் பயின்றுவரல் காணும் போதில் பனைக்கழுத்தில் ஊறிவரும் சாற்றுக் கள்ளைப் பாலென்று குடிப்பதனை ஒக்கு மென்றே அனைத்துமொழி நல்லோர்கள் கூறி யுள்ள அமுதமொழி மறந்தவனும் அல்ல லுற்ருன் !