உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 145 பொன்னப்பன் தாமரையின் விடையைப் பெற்றுப் புறப்பட்டான் அன்றைக்கே தஞ்சை நோக்கி தின்னப்பல் பண்ணியமும் செய்து வைத்துத் தேவைக்குத் தக்க உடை கட்டி வைத்து என்னப்பன் வழிச்செலவை இனிய தாக்க எழுந்தருள்க கணபதியே எனவ ணங்கி அன்னைப் பெண் மங்கையரும் வாழ்த்துக் கூற அவன் வணிகர் கூட்டத்தோ டொருங்கு சென்ருன். வழிச்செல்லும் ஊரெல்லாம் தங்கித் தங்கி வாணிபங்கள் புரிந்தபடி சென்றி ருந்தார் எழில் முகத்துத் தாமரையை எண்ணி நெஞ்சம் இருந்துவந்த திசைநோக்கும்; தஞ்சை வாழும் உழுவலன்பன் தனைவிரைவில் காண எண்ணம் ஒடி நிற்கும்; வழிப்பயணம் தேங்கும் போதில், பழித்திருக்கும் வணிகர்களை; இவ்வா ருகப் பலநாட்கள் சென்றதன்பின் தஞ்சை சேர்ந்தான்! தஞ்சைக்கு வந்துள்ளான் நண்பன் என்ற தகவலறிந் தக்கணமே விரைந்து வந்து நெஞ்சாரத் தழுவிவர வேற்றுச் சென்றே நெடுநேரம் நலங்கேட்டுப் பேசிப் பின்னர் தஞ்சையர சாளுகின்ற மன்ன ருக்கும் தளபதிகள் அமைச்சர்அதி காரி கட்கும் செஞ்சொலால் அறிமுகங்கள் செய்து வைத்துச் சிறப்பாக முத்தப்பன் விருந்து வைத்தான்! 'அப்பாவும் அம்மாவும் நலமா? உன்றன் அகத்திருக்கும் தாமரையாள் நலமா? காதல் இப்போதைக் கெவ்வளவில் வளர்ந்த தென்றே இயம்பிடுவாய், என் நண்பா, திரும ணத்தை —10–