உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நாச்சியப்பன் எப்போது வைத்துள்ளாய் சொல்க” என்றே ஏதேதோ முத்தப்பன் கேட்டி ருந்தான் 'ஒப்புக்கேன் கேட்கின்ருய்? காதல் என்ருல் உனக்குத்தான் வேப்பங்காய் ஆச்சே” என்ருன். தேனிருக்கும் பொற்குடந்தான் காதல் என்று தெரிந்து கொண்டு விட்டேன் நான் அக்கு டத்தைப் பானிலவு வீசுகின்ற இரவு தோறும் பருகுகின்றேன் தவருமல் நண்பா' என்ருன். 'வான்கதிரின் அனல் மாற்றிக் குளிர வைத்த வடிவழகி யார்?’ என்று பொன்னன் கேட்கத் தேன்மொழியாள் முல்லையென்பாள் தஞ்சை மன்னர் திருக்குமரி” என்றுரைத்தான் முத்தப் பன்னே. "கரையாத உன்மனத்தைக் கரைத்த முல்லை கட்டழகி யாகத்தான் இருத்தல் வேண்டும் முறையாக அவளோடு பேசி யைா? முகமலர அவளுன்னை ஏற்கின் ருளா? தெரியாமல் நீ மட்டும் காத லித்துச் சிறுபிள்ளை போலமணல் வீடு கட்டிப் பெரிதாகக் கற்பனைகள் புரிகின் ருயா? பேதைமையா? உண்மையிலே காதல் தான?’ 'ஏனிந்த ஐயங்கள் கொள்ளு கின்ருய் என்பேச்சில், பொன்னப்பா காத லென்ருல் தாகைக் கற்பனைகள் புரிந்து கொண்டு தையலரை மனத்துள்ளோ நாடுங் கூற்ரு? மீன்விழியாள் முல்லையென்மேல் விருப்ப மின்றி இருந்திடுவாள் என நீயேன் நினைக்க வேண்டும்? தேனை முல்லைஎன இரவு தோறும் தேடிவந்து சந்தித்துப் பேசு கின்ருள்.”