பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 149 மன்னரைப் போய்த் தனியாக ஒருநாள் பார்த்தான் 'மாபாவி முத்தப்பன்!” என்று சொன்னுன் "என்ன வென்ன?’ என்றுமனந் திடுக்கிட் டாராய் எதிர்பார்த்துக் கேட்டிருந்தார் தஞ்சை மன்னர் “மன்னவரின் மகளையவன் காதலித்து மணந்தால் நான் அவளைத்தான் மணப்பேன் என்று தன்னதுதான் முடிவென்று கூறிக் கொண்டு தகாததாம் ஆசையினை வளர்த்துக் கொண்டான். "எங்கெங்கும் அவர் புகழைப் பேசுகின்ருர் எவ்விடத்தும் அவர்சிறப்பைப் போற்றுகின்ருர் இங்குநீ உயிர்க்காவல் துணையாய் வந்தாய்; ஏளனத்தை மன்னருக்குச் சேர்த்தி டாதே மங்கையவள் கைப்பிடிக்க ஆசை கொண்டு மன்னர் குலப் பிறப்புடையோர் காத்தி ருப்பார் எங்கெந்த மன்னவரின் அரசி யாக இருப்பாளோ திருமகளாள் மறப்பாய்” என்றேன். போடாநீ போவென்று புகலுகி ன்ருன் புரிந்தால் நான் அவளைமணம் புரிவேன் என்று சூடாகப் பேசுகின்ருன் தையல் தோளைச் சுவையாக வருணித்துச் சொல்லு கின்ருன்: கூடாத நட்பைத்தே டிப்பி டித்துக் கொண்டதுபோல் இளவரசி பின்னே சுற்றப் பாடாகப் படுகின்ற காதல் பற்றிப் பலர் ஊரில் அலர்துாற்று கின்ரு ரென்ருன். "நல்லவன் போல் நடித்தானே அவ்வி ளைஞன் நம்வீட்டுப் பெண்கையைப் பிடிக்கத் தான! தொல்லைதரும் செயல்செய்தான் காத லித்துத் துன்புறுத்த என்மகளா கிடைத்தாள்! அந்தோ!