பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நாச்சியப்பன் வல்லவராய் மறவர்களாய் உள்ளோர் மாதை மணம்புரிய மறுத்துவிட்டால் என்ன செய்வேன் பல்லுடைத்தே அனுப்புகின்றேன் பொன்னப் பாநீ பா’’ ரென்று சீறிநின்ருர் தஞ்சை மன்னர். 'பொறுத்தருள வேண்டுகின்றேன் மன்னர் பெம்மான் பொல்லாத செயலிதனை என்றன் நண்பன் வருத்துகின்ற நினைப்பாலே செய்ய வில்லை வாலிபத்து முறுக்காலே செய்துவிட்டான் திருத்துகின்ற மொழியாலே சொன்னல் போதும் திருந்திடுவான் பிறவியிலே தீய னல்லன் கருத்தினிலே உதித்தசினம் மாற்றிக் கொண்டு கனிவுடனே மன்னரிதை நினைக்க வேண்டும்.” என நட்பைக் காப்பான்போல் திறமை யாக எடுத்துரைத்தான் பொன்னப்பன் மன்ன வர்பால் இனப் பகையைக் கிளப்பிவிட்டால் அதைத் தடுக்க எளிதாக இயலாத வாறு போல தனவணிகன் முத்தப்பன் மன்னர் சாதி தனிற்கீழாம் எனவெண்ணிக் கொள்ளு மாறு மனதாரப் பகைமூட்டி விட்ட பொன்னன் மறுபடியும் கெஞ்சுவது போலச் சொன்னன். 'பருவத்துப் பெண்ணுன முல்லை தன்னைப் பசப்பாலே முத்தப்பன் கெடுத்து விட்டான் கருவத்தை மிக்குடைய இளைஞன் தன்னைக் கண்டித்துத் தண்டித்தல் வேண்டு'மென்றே உருமித்தன் சினமெல்லாம் வெளிப் படுத்தி ஓங்காரக் கூச்சலிட்டுத் தஞ்சை மன்னன், 'உருவத்தை என் முன்னே காட்டவேண்டாம் ஊர்விட்டுத் துரத்திடுவீர்” எனப்ப னித்தான்,