உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நாச்சியப்பன் வெறிச்சென்று தன்வாழ்வு போன தாக வெந்துமணம் புழுங்குகின்ற முல்லே தன்னைக் குறிச்சுவையாய்ப் பொன்னப்பன் கொண்டு நின்று குறுக்கிட்டுச் சென்றுபல பேச லானுன்! ஆசையுடன் பொன்னப்பன் பேச எண்ணி அருகுவரும் போதெல்லாம் வெறுப்புக் காட்டி கூசிடவும் நாணிடவும் ஏசிக்காட்டிக் குறுமதியைப் பழித்திடுவாள் முல்லை மங்கை வாசமுள்ள பூக்கொண்டு போய்க்கொ டுப்பான் வாங்கியதைத் தரைமீது வீசிப் போட்டு மீசையுள்ள ஆண்பிள்ளை தான என்று மேற்கேள்வி கேட்டவனைக் குனிய வைப்பாள். 'வைதாலும் பழித்தாலும் என்னை நீதான் வாழவைக்க வேண்டு'மெனச் சிரித்து நிற்பான் மெய்தானும் விதிர்விதிர்க்க முல்லை சொல்வாள் 'மேலான என்வாழ்வைக் குலைத்து விட்டாய் பொய்தானும் புவிமீது நிலைக்கு மால்ை புல்லர்களின் வல்லாட்சி தானே யோங்கும் வெய்தாக விடப்பட்ட நிலப்பரப்பில் விளைவதெலாம் கோரைகளாய்த் தானிருக்கும்!” பொன்னப்பன் முல்லைதனைச் சுற்றிக் கொண்டு பொழுதெல்லாம் அலைந்திருக்க மதுரை தன்னில் சின்னக்கல் மோதிரத்தைப் பார்த்துக் கொண்டு தினந்தினமும் கனவுபல கண்டி ருந்த பொன்னணங்கு தாமரையாள் பசலை நோயால் பூமேனி மெலிந்தவளாய் மீண்டும் என்று தன்னன்பன் வருவானே என்று காதல் தணல் மீது வெந்தபடி காத்தி ருந்தாள்.