உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ாடல்கள் 153 காத்திருந்த கண்ணிரண்டும் பூத்துப் போச்சாம்! காதலன்மேல் நம்பிக்கை தோற்றுப் போச்சாம்? பூத்திருந்த சோலையெலாம் இருண்டு போச்சாம் பொழுதடையும் மாலையெலாம் வெறுத்துப்போச்சாம்! ஆத்திரத்தில் தனமறந்தான் தனைப் பழிக்க ஆவலுடன் துடிக்கின்ற நாவ டக்கிச் சாத்திரத்தில் நம்பிக்கை வைத்துத் தெய்வம் சந்திக்க வைக்குமெனத்தேற்றிக் கொள்வாள்! காமாட்சி என்னுமொரு தோழி வந்து, 'கட்டாயம் வேண்டியதை மதுரைத் தெய்வம் மீனாட்சி யருள்புரிவாள்' என்று கூற மெல்லியலாள் கோயிலுக்குச் சென்று வந்தாள் ஆராய்ச்சி செய்கின்ற மாண வன்போல் அத்தெய்வ மித்தெய்வ மெல்லாம் வேண்டிக் கோலோச்சும் மனக்குரங்கை அடக்காளாகிக் குறையொழியப் பயணத்தில் நாட்டம் வைத்தாள். பெற்ருேர்க்குத் தெரியாமல் இரவுப்போதில் பின்கட்டு வழியாக வெளியில் போந்து வற்ருத வளங் கொழிக்கும் தஞ்சை நோக்கி வடிவான பூவடிகள் தரையில் ஊன்றிப் பற்ருதான் பற்றைப்போய்ப் பற்று தற்குப் பாய்கின்ற மனக்குரங்கைப் பற்றிக் கொண்டே உற்ருரும் ஊராரும் பழித்துப் பேச ஊர்விட்டுத் தாமரையாள் புறப்பட்டாளே! பெண்ணுகத் தனிவழியில் நடந்து சென்ருல் பேய்போன்ற ஆடவர்கள் தொடர்ந்து வந்து புண்ணுகச் செய்வார்கள் என்று ணர்ந்து பொற்செல்வி தாமரையாள் ஆணைப் போல