உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நாச்சியப்பன் எண்ணியவா ருெருவேடம் போட்டுக் கொண்டு இரும்பாக நெஞ்சத்தை யாக்கிக் கொண்டு கண்ணுன பெற்ருேரை விட்டு விட்டுக் காட்டுவழிப் பாதையிலே நடக்கலானள். காதலெனும் மதுக்குளத்தில் மூழ்கிவிட்டால் கண்தெரியா தெனவான்ருேர் சொன்ன வாறு பேதைமகள் தாமரையாள் காட்டுப் பாதை பெற்ருேரைக் கலங்கவிட்டு நடக்கலானள் மாதொருத்தி அழகாக இருந்து விட்டால் மயங்குகின்ற ஆடவரின் காதல் பேச்சைச் சூதென்று தெரியாமல் நம்பு கின்ற தோகையர்க்குத் துயர்க்காடே பாதை யாமோ! வீட்டினிலே பளிங்குக்கல் தரையின் மீதும் வெளிச்சென்ருல் சோலைப்புல் தரையின் மீதும் பாட்டினிலே இடம்பெற்ற பஞ்சுப் பாதம் பதியநடை யிட்டிருந்த தாம ரைப்பெண் காட்டினிலே குறுங்கற்கள் அழுத்தும் போதும் கண்கலங்க முட்குத்தி வலிக்கும் போதும் நாட்டமுள்ள காதலினல் தாங்கிக் கொண்டு நடையிட்டாள் உறுதியிலே குலைவு ருதே! எப்போதும் சிள்வண்டின் ஒலியிருக்கும் இடையிடையே காய்சருகு சலசலக்கும் கொப்போடு கிளை முறியும் ஒசைகேட்டும் குமுறிவரும் காட்டாற்றின் சீற்றம் கேட்கும் எப்போதோ புலியுறுமும் சத்தம் கேட்கும் இடையிடையே யானைகளோ பிளிறியோடும் குப்பென்றே உடல்வேர்க்கச் செய்யும் காட்டில் குலேயாத உறுதியுடன் நடையிட் டாளே!