பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பாடல்கள் மலைப் பாம்பின் வாயிடுக்கில் சிக்கிக்கொண்டு மாடொன்று தத்தளிக்கும் காட்சி கண்டும் சிலவேடன் குறிவைத்தோர் மானைத் தாக்கச் சீறிவந்த புலியவனைக் கொல்லக் கண்டும் குலைநடுங்கக் குரங்கொன்றை மிதித்துக்கொண்டு குறியற்ருேர் மதவேழம் ஒடக் கண்டும் அலையாத உறுதியுடன் நெஞ்சக் காதல் ஆர்வத்தால் கான்கடந்து நடையிட் டாளே! சிங்கத்தின் முழக்கொன்றில் அதிர்ந்து போன சிறுமுயல்கள் புதர்களிலே போயொ டுங்க அங்கத்தை யசைக்காமல் காட்டில் உள்ள அத்தனைவி லங்குகளும் மறைந்தி ருக்க தொங்கத்தம் கிளேக்கையைக் காற்றில் ஆட்டித் தொடுக்கின்ற ஒலியன்றி வேறில் லாத மங்குற்ற இருட்காட்டில் உறுதி மிக்க மனங்கொண்டாள் காதலினல் நடையிட் டாளே! நாகங்கள் ஐந்தாறு பட மெ டுக்க நட்டுவத் தேள் கொடுக்குயர்த்தி பரபரக்கக் காகங்கள் பயந்தலறிக் காகா வென்ன கருங்குரங்கு நடுநடுங்கிக் கிளைக்குத் தாவ மேகங்கள் எனவேழம் சிதறி யோட மிதிபட்ட பழச்சாறு பீறிப் பாயச் சோகங்கள் மலிகின்ற காட்டில் காதல் தொடுகின்ற உறுதியுடன் நடையிட் டாளே! மரக்கிளைகள் மேற் சூழ்ந்து மறைப்ப தாலே வானத்துக் கதிரொளியைக் காணு தங்கே தரைப்புல்லும் வெளுத்திருக்க மண்பர ப்பும் தண்ணென்று சில்லிட்டுக் குளிரெ ழுப்பு