உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நாச்சியப்பன் பகற்பொழுதும் இருட்டாகிப் பயமுறுத்தும் பச்சைமரக் காட்டிடையே தாம ரையாள் மனக்காதல் வழிநடத்த உறுதி கொண்டு மலையாமல் குலையாமல் நடையிட் டாளே! நெடுந்துாரம் இருட்காட்டில் நடந்த பின்னே நிலப்பரப்பில் ஒளிபரப்பும் கதிரைக் கண்டாள் தொடுவானம் தெரியுமட்டும் மரங்குறைந்து தொடர்ந்திருக்கும் புதர்ப்பரப்பைக் கண்டு மேலும் கடிதாக நடந்தால்தான் தஞ்சை நாட்டைக் கண்டிடலாம் விரைவாக என்று தோன்ற அடியெட்ட வைத்துநடை போட்ட போதில் அழகுமகள் உடற்சோர்வு கொள்ள லானுள். நடந்து நடந் துடல்களைத்தும் அடிகள் நொந்தும் தங்கையவள் சென்றவழிப் பாதை தன்னில் கிடந்தவொரு பாறையின்மேல் அமர்ந்த போதில் கிள்ளியெழு பசிதன்னை அடக்கா ளாகி வடிந்துவிட்ட முகத்தோடும் உண்ணு தற்கு வழியறியா மனத்தோடும் சாய்ந்த போது மடந்தையவள் கண்ணெதிரில் மரக்கி ளையில் மாம்பழங்கள் தங்கமெனத் தொங்கக் கண்டாள்! மாம்பழத்தைப் பறித்துண்ண வாவும் உள்ளம்; மயங்கிச்சோர்த் துள்ளவுடல் எழத் தயங்கும்; கூம்பசியோ சோர்வுதனைப் புறத்தே தள்ளும்; குறுகுறுக்கும் கைநீளும் கிளையை நோக்கி ! காம்பொடியப் பழமொன்று தவறி வீழக் கணிப்புறத்தை தரைமண்ணும் ஒட்டிக் கொள்ள தேமொழியோ மண் நீக்கிக் கனியைத் தின்று சிறிதுபசி தணித்துக்கொண் டோய்ந் திருந்தாள்.