உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நாச்சியப்பன் வாணுதலே சீறுவதேன்? ஊறென் செய்தேன்? வந்தநாள் முதலாக உன்னைக் காத்துப் பேணுதலே வாழ்வாகக் கொண்டு விட்டேன் பிழையில்லாக் காதலுற்றேன்; என்னை ஏற்பாய்! மாமன்னர் என்துணையை ஏற்றுக் கொண்டார் மாதரசி நீயுமென ஏற்றுக் கொண்டால், பூமிதனில் நான்பிறந்த பயன் கிடைக்கும்; பொங்கிவரும் பேரின்பம் நமது வாழ்வில்! ஆமெனவே ஒருமொழியை உரைப்பா யேல் நான் அடைந்திடுமவ் வின்பத்திற் களவே இல்லை. பூமனமே கொண்டவளே, சீற்றம் விட்டுப் பொறுமையுடன் சிந்தித்துப் பதிலு ரைப்பாய்! உன்துணையாய் என்னை நீ ஏற்று விட்டால் ஒரு துயரும் அணுகாமல் காவல் செய்வேன்; நின்றடியால் இட்டசெயல் தலையாற் செய்வேன்; நிலப்பரப்புப் பலவென்றுன் அடியிற் சேர்ப்பேன்; தொன்றுதொட்டுத் தஞ்சைக்குச் சேர்ந்தி ருக்கும் தூயபுகழ் மேலும்வளர்ந் தோங்கச் செய்வேன்; இன்றுனது நன்முடிவை எனக்குச் சொல்வாய்; இனியவளே என்வாழ்விற் சுவையைச் சேர்ப்பாய்! நாள்தோறும் ஊதுகின்ற சங்கை நல்ல நடிப்புடனே அன்றுமவன் ஊதி நின்ருன். ஒடோடு பொன்னப்பா எனக்குச் செய்த ஊறெல்லாம் போதுமினி நில்லா தேநீ பீடோடு வாழ்ந்திருந்த நண்பனுக்குப் பிழைசெய்தாய்; கூற்றுவய்ை வந்தாய் என்காற் சோடோடு விளையாட நினைக்கா தேநீ சொல்லிவிட்டேன்; இப்போதே தொலைவிற்போவாய்,