உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 163 பொன்னப்பன் கத்துாரிச் சிமிழை வாங்கிப் புறப்பட்டான் விரைவாக; அவள்தெர் டர்ந்தாள். என்னப்பா முருகப்பா மகளிர் வாழும் இப்புறத்தே ஆடவர்கள் புகுதல் தப்பாம் என்னத்தான் புகன்றவளைத் தடுத்து விட்டே எல்லைகடந் தவன்சென்ருன்; முல்லை என்னும் பொன்னத்தான் போய்க்கண்டான்; சிமிழை நீட்டிப் புகழ்மணக்கும் கத்துரரி இந்தா என்ருன். சற்றேனும் சுணங்காமல் தாம ரைப்பெண் சடசடென அவன்காணு வணம்தொ டர்ந்தாள். பற்றேதும் இல்லாத முல்லை முன்னே பல்லிளித்துப் பொன்னப்பன் பலசொற் பேசக் குற்றேவல் மங்கையர்தாம் சூழ்ந்தி ருக்கக் கோடியழ குள்ளமுகம் படைத்த செல்வி பற்றியதோர் நெருப்பெனவே மனம்பு ழுங்கிப் படபடென வெடிப்பேச்சுப் பேசி நின்ருள். எடுத்தெறிந்த சிமிழ்மூடி திறந்த தாலே இருக்கும்கத் துாரிமணம் பரப்பி நிற்கத் துடித்தமனங் கொண்டஇள வரசி யேசச் சுவர்போலே பொன்னப்பன் நின்ருன், அன்னுள் முடித்தவுடன் காதல்மொழி தொடங்கி நின்ருன்; முல்லைக்குப் பாரியின்தேர் போலே நிற்பேன் வடித்தெடுத்த சிற்பமென நிற்கும் அன்பே, வாழ்வுக்குத் துணையாக என்னே ஏற்பாய்! காணுமுன்னே நானுன்னேக் காத லித்தேன் கண்ட்வுடன் அக்காதல் பெருக லாச்சே, ஊணுறக்கம் இன்றிஉன்னை எண்ணி யெண்ணி உள்ளந்தான் சுற்றுதம்மா! என்னைக் கண்டால்,