உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நாச்சியப்பன் பொன் போலும் முகம்படைத்த இளைஞ னைத்தான் புதிதாகப் பார்த்தாலும் எங்கோ என்ருே முன்பேபார்த் திருப்பதுபோல் எண்ணிக் கொண்டு முறுவலுடன் பொன்னப்பன் யார் நீ! என்ருன். என்னுாரும் தென்மதுரை முருகன் என்றல் என்பெயராம். மணப்பொருள்கள் விற்ப தென்றன் முன்னேரின் தொழிலாகும்; அதையே நானும் முறையாகப் பின்பற்றிச் செய்ய லானேன்! தன்னேரில் லாத இந்தத் தஞ்சை மன்னர் சவ்வாது கத்துாரிக் கன்பர் என்றே என்னுரில் சொலக்கேட்டே இங்கு வந்தேன் என மன்னர் இடஞ்சேர்க்க வேண்டு கின்றேன். உங்களுக்கும் ஏற்றபொருள் உண்டிங் கையா ஒருமுறைதான் தொடர்புகொண்டால் விடுவதில்லை; சங்கொலித்து வென்றிகொள்ளும் மன்னர் பாலென் சரக்கனத்தும் விற்றுவிட ஒத்து ழைப்பீர். மங்கை நல்லாள் இவ்வாறு சொல்லும் போதே மனத்துக்குள் பொன்னப்பன் எண்ணு கின்முன்; "இங்கிவனின் கத்துாரி முல்லைக் கீந்தால் என்னையவள் விரும்பிடநல் வாய்ப்பாம்” என்றே! மணவனிகம் செயவந்த முருகா உன்பால் வைத்திருக்கும் பொருள்களிலே விலையு யர்ந்து குணமிகுந்த பொருள் ஒன்றைத் தருவா யானுல் குறைவின்றிப் பொருள்தருவேன்; மன்ன ருக்கும் கணக்கின்றி விற்பதற்கு வழிகள் செய்வேன் - கடிதில்எடு சிறந்தபொருள் என்று கேட்டான் சுணக்கின்றித் தாமரையாள் சிமிழெ டுத்துச் 'சுகவாசக் கத்துரி எனக்கொ டுத்தாள்.