உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 161 வாய்பிளந்த வாறிருக்கும் இருசிங் கங்கள் வாலுயர்த்திக் காவலுக்கு வந்தாற் போலே வாயிலிரு புறத்துமிரு சிற்ப மாக வாளுயர்த்தி நின்றபடி வீரர் காக்க ஓயாமல் கடலலைபோல் மக்கள் பல்லோர் உள்நுழைந்தும் வெளிப்பட்டும் செல்லும் கோட்டை வாயிலுக்குத் தாமரையாள் வந்து சேர்ந்தாள் வணிகவுருக் கொண்டவளாய் வந்து சேர்ந்தாள். மதுரைநகர் வணிகன்யான்; தொன்று தொட்டு மணப் பொருள்கள் விற்பதனைத் தொழிலாய்க் புதிதான கத்துரி சவ்வா. துண்டு (கொண்டேன் புனுகுண்டு அத்தர்வகை தானு முண்டு மதிமன்னர் தம்மிடத்தே வணிகம் செய்ய வந்துள்ளேன் என்றவளும் சொல்லக் கேட்டே அதிவிரைவில் உன்பொருள்கள் விற்கு மப்பா அரசர்க்குப் பிடித்தபொருள் கொணர்ந்தாய் அப்பா, எனச்சொல்லிக் காவலர்கள் உள்ளே விட்டார் எழில்மிகுந்த இளைஞனிவன். மன்னர் கண்டால் தனக்கென்றும் அன்புமிகு மகளுக் கென்றும் தடையின்றி வாங்கிடுவார் என்று பேச மனக்கருத்தில் பொன்னப்பன் தன்னைக் காணும் மட்டற்ற ஆவலுடன் சென்ற பெண்ணுள் தனக்கெதிரில் வருமவனைக் கண்டு நின்ருள் தனநோக்கும் அவனை அவள் நோக்கி நின்ருள். அன்பேஎன் ருேடியணைந் திடத்தான் உள்ளம் ஆவலுடன் பறந்திடவே நின்ற மங்கை முன்பேஒர் வேடத்தில் வந்த தெண்ணி முடக்கித்தன் வேகத்தை யடக்கிக் கொண்டாள்