உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நாச்சியப்பன் தாவிப்போய் இழுத்தவளைத் தன்மார் போடு தழுவியணைத் தவனிருக்க நாணங் கொண்ட பாவனையாய் அவளொதுங்க மீண்டும் பற்றிப் பக்கத்தே இழுத்தணேத்துக் கொள்ளக் கண்டாள். ஊருணியில் நீர் மொள்ளப் போகும் போதில் ஒரு தெருவின் வழியாகப் பரியி வர்ந்து போருடையில் வருகின்ருன் காதல் கொண்ட பொன்னப்பன்; அவள் நிமிர்ந்து நோக்கு கின்ருள். வாருடைய பரிக்காலின் புழுதி மூட்டம் வந்தவளின் கண்மறைக்கக் கல்லில் மோதிச் சீருடையாள் விழுமுன்னே குதித்து வந்து திண்டோளில் தாங்கிக்கொண் டிருக்கக் கண்டாள். ஊர்ப்புறத்தில் மஞ்சுவிரட் டாமே போவோம் உடனேவா என்றவனும் அழைத்துச் சென்ருன் காரியொன்றைப் பிடிக்காமல் இளைஞ ரெல்லாம் கதிகலங்கிப் பயந்தொதுங்கப் பொன்ன ைேடி நேரெதிர்த்துக் கொம்புபற்றிப் பரிச விழ்த்து நின்றநிலை கண்டுபெரு மக்கள் சூட்டு தாரெடுத்து வந்தவளின் கழுத்தில் இட்டுத் தான்கொண்ட பரிசினையும் தரக்கண் டாளே! கற்பனையோ அற்புதமோ கண்ட தெல்லாம் கனவுகொலோ நனவுகொலென் லறியா ளாகிப் பற்பலவாய் நினைத்தபடி யுறங்கிப் போளுள் பகலவனர் தோன்றுமுனம் எழுந்து விட்டாள்t ஒப்பனைகள் செய்தபடி ஆணு டையில் ஒருவணிக ய்ைத்தன்னை ஆக்கிக் கொண்டு மெய்ப்புலவர் பாட்டுக்குப் பரிசு நீட்டும் மேலான மன்னரரண் மனைக்குச் சென்ருள்!