பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நாச்சியப்பன் கொத்துமலர் சிதைக்கின்ற குரங்கு போலே கூறுபடப் பலர்வாழ்வைக் கெடுக்கும் இந்தப் பித்தனுடை வெறிச் செயலைக் கண்ட பின்னே பேதைமனம் வாதையுடன் கொதிக்கு தம்மா! பிழைத்திட்டம் இவன்போட்டான்; நிறைவே ருமல் பீறுவதே இலட்சியமாய்க் கொண்டேன்; தீயன் இழைத்திட்ட சூழ்ச்சியினல் பிரிந்து சென்ற ஏற்றமிகு முத்தப்பர் தம்மைக் கண்டே அழைத்திட்டு வந்திங்கு சேர்ப்பே னம்மா! அன்புடைய நெஞ்சங்கள் தமைப்பி ரித்துக் கொழுத்திட்ட வஞ்சகனைத் தோற்க டித்தல் குறியாகச் செயல்படுவேன் காணு யம்மா! நெஞ்சாரக் காதலித்த தாலே காட்டு நெடுவழியைக் கடக்கின்ற போதிலெல்லாம் அஞ்சாத நெஞ்சத்தேன் அஞ்சு கின்றேன்; அற்பணிவன் கொடுஞ்சூழ்ச்சி கண்ட பின்னே! பஞ்சாகப் பறக்கட்டும்; கெட்டழிந்து பாழாகப் போகட்டும்; பிறரின் வாழ்வை நஞ்சாகச் செய்கின்ற வஞ்ச நெஞ்சன் நலங்கெட்டுச் சிதையட்டும்; ஒழியட்டும்மே! கொதிக்கின்ற நெஞ்சுடனே தாமரைப்பெண் கூறியன இளவரசி முல்லை கேட்டாள். சதிக்கிணறு தோண்டியவன்; தனது காதல் தனைச்சிதைத்த பொன்னப்பன் தன்னைத் தேடி மதிக்குநிக ராண்முக மடந்தை காட்டு வழிகடந்து வந்ததையும், மனங்கு லேந்து குதிக்கின்ற மலையருவி தெறித்தல் போலே கொட்டுகின்ற பேச்சினையும் சிந்தித் தாளே!