உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 171 காதலித்துப் பேசியொரு பெண்ணின் வாழ்வில் கடைகொண்ட நம்பிக்கை சீர்கு லேத்தான்; ஆதரவுத் துணையான நண்பன் வாழ்வை அவ்லமுறச் செய்துவிட்டான்; மேலும் தன்னை வேதனைக்குள் ளாக்குகின்ற செயல்மேற் கொண்டான்; வெறுப்புக்கே உரியவனுய் விளங்குகின்ருன்; . பாதகனின் போக்குக்கு முடிவின் ருகில் பலருக்குத் துன்பியற்றிக் கொண்டிருப்பான்! இதுநிறுத்த வேண்டுமென முடிவு செய்தாள் எதிர்நின்ற தாமரைப்பெண் தன்னைப் பார்த்து மதுநிகர்த்த எழிலுடைய பெண்ணே உன்னே மனதாரக் காதலித்த பின்னே வேறு புதுமோகம் மேற்கொண்டு சூழ்ச்சி செய்த புல்லனிவன் இனியென்றும் நல்ல கைான்; எதுவரினும் இவன்கருத்து நிறைவே ருமல் இயற்றுவதே கடமையெனக் கொள்ளல்வேண்டும். மன்னவர்க்கு நல்லவன்போல் நடித்துக்கொண்டு மமதையுடன் செயல்புரியும் கேடன் சூழ்ச்சி இன்னதுயர் விளைக்குமெனச் சொல்லப் போமோ? எத்தனைநாள் இவன்தொல்லை பொறுத்திருப்பேன் மின்னலென வந்தவளே, ஆணின் தோற்றம் மேற்கொண்டு நானுமுன்னத் தொடரு கின்றேன் என்னருமை முத்தப்பர் தம்மைத் தேடி எய்திடநீ உதவிடுவாய் என்று சொன்னுள். இளவரசி, அதுவேண்டாம்; உங்கள் காதல் ஏற்றவுயர் முத்தப்பர் தம்மைத் தேடி உளந்தளர்ந்த தங்கள் நிலை கூறி இங்கே உடன்கூட்டி வருகின்றேன்; மன்னர் நெஞ்சில்