உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நாச்சியப்பன் பெருங்காதல் வலிவாலே சென்று விட்ட பெண்ணழகி தாமரையைத் தேடிக் கண்டு சருகாகக் கிடக்கின்ற பெற்ருேர் முன்னே சடுதியிலே கொண்டுவரப் புறப்பட் டானே! நட்புடையான் என்றிருந்த பொன்னப் பன்தான் நயவஞ்சகத் தால்தன்னைக் கெடுத்தான் என்ற நுட்பத்தை உணர்ந்திருந்த கார ணத்தால் நோய்மனத்தான் தாமரைக்குக் கேடு செய்தால் புட்பத்தை யொத்தவளால் தாங்கப் போமோ போய்க்காக்க வேண்டுமென முத்தப் பன்தான் புட்பறந்த வாறுவிரை வாகச் சென்ருன் புழுதிபறக் கின்றநெடும் பாதை மீதே! அழகரசி இளவரசி முல்லை கொண்ட அன்புமிகு காதல்தனை நிறைவு செய்யப் பழகுதமிழ் அனேயமகள் தாம ரையாள் பாய்ந்தோடி வருகின்ருள் ஒருபு றத்தே! பழமனைய பெற்ருேர்க்கு மகளைத் தேடிப் பக்குவமாய் ஒப்படைக்க முத்தப் பன்தான் நிழல்வழங்கு பெருங்காட்டு வழியில் சற்றும் நில்லாமல் விரைகின்ருன் ஒருபு றத்தே! எதிரெதிரே பாய்ந்துவரும் பரிஇரண்டும் இடைக்காட்டில் ஒரிடத்தில் நின்ற தம்மா! மதிமுகத்தைத் தலைப்பாகை மறைத்த தாலே மட்டுப்ப டாதாரோ என நினைத்தே எதிர்நின்ற முத்தப்பன் தனைய ழைக்கும் இனியகுரல் கேட்டங்கே நிமிர்ந்து பார்க்க அதிசயந்தான் உங்களைத்தான் தேடி வந்தேன் அண்ணுவென் றுரைத்தகுரல் தன்னைக் கேட்டான்.