உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் ከጎ3 சேடியர்கள் இவ்வாறு பேசிக் கொள்ளச் செவ்விமிகு தாமரையாள் புரவி யேறிக் காடுகரை மேடுமடுக் கடந்து சென்ருள்! கட்டழகி முல்லைக்காய்த் துTது சென்ருள்! நாடுநகர் என்றுபல ஊர்க டந்து நல்லவனம் முத்தப்பன் தன்னைத் தேடி ஒடுகின்ருள்; பறக்கின்ருள் சூழ்ச்சிக் காரன் உன்மத்த வெறித்திட்டம் தடுப்ப தற்கே! வெறுப்புற்ற மன்னவரால் விரட்டப் பட்டு வெளிப்போந்த முத்தப்பன் மதுரை சென்று பொறுப்புற்று வாணிபத்தைப் புரியும் காலை பொன்னப்பன் காதலியின் நினைப்புத் தோன்றக் குறிப்புற்றுத் தனக்கின்ன செய்த நண்பன் கோதையிடம் கொண்டிருந்த காதற் கேனும் நெறிப்புற்று நடந்தானே என்று காண நினைத்தவளின் இல்லத்தை நோக்கிச் சென்ருன். சொல்லாமல் தாமரையாள் ஒடிச் சென்ற துயரத்தில் உழல்கின்ற பெற்ருேர் கண்டு நில்லாமல் அப்போதே அவளைத் தேடும் நினைப்போடு புறப்பட்டான்; மதுரை விட்டான்; பொல்லானும் பொன்னப்பன் தன்னைத் தேடிப் புறப்பட்டுப் போயிருப்பாள் என்றே எண்ணிச் செல்லாத தஞ்சைக்குச் செல்ல வென்றே சேயிழையைத் தேடியவன் புறப்பட் டானே! கருதாமல் சின்னவர்கள் பிரிந்து போவார் கண்ணிரை விட்டிருக்கும் பெற்ருேர்க் கன்ருே உருவான அன்பளவு தெரிந்தி ருக்கும் உருக்கத்தில் பொலிந்திருக்கும் என்றுணர்ந்தே