பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$76 நாச்சியப்பன் தன்னளவில் துடிக்குமிள வரசி என்னைத் தங்களிடம் தூதாக அனுப்பி வைத்தாள்: மின்னலென விரைந்துசெய லாற்ரு விட்டால் வேதனைதான் விஞ்சுமென விளம்பி நின்ருள். துணிந்துசெயலாற்றுகின்ற உன்னை நோக்கத் தோகைமயில் அனையவளே தாழ்ந்து விட்டேன்; பணிந்துசெய லாற்றுகின்ற பண்பே விஞ்சிப் பயனின்றி இத்தனைநாள் கழித்து விட்டேன்; அணியணியாய்த் துயர்வரினும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுனைக் கண்டதனால் அடைந்து விட்டேன் மணியனைய இளவரசி துயரைப் போக்க மற்றிந்த நொடியேநான் விரைந்து செல்வேன்! பெற்ருேர்பால் சென்றிடுவாய்; உன்னைப் போன்ற பேதையர்கள் தனியாகப் பயணம் செய்தல் சற்றேனும் சரியல்ல உணர்ந்தி ருப்பாய்; தவிப்போடு வாழ்வார்க்கு மகிழ்ச்சி சேர்ப்பாய் பொற்ருெடியே எனச்சொல்லி முத்தப் பன்தன் புரவிதனைத் தட்டிவிட்டான் தஞ்சை நோக்கி! வெற்றிமகள் தாமரையும் பின்தொடர்ந்தாள்; வேண்டாமென் றவன்தடுத்தும் கேட்க வில்லை. காதலிலே தோற்றவர்கள் மனமு டைந்து கதியின்றி முடிவுதனைத் தேடிக் கொள்ளும் வேதனையே மிஞ்சியுள்ள உலகந் தன்னில் வீரமகள் தாமரையோ, இன்னெ ருத்தி காதலினை நிறைவேற்றும் கடமை பூண்டு கருத்தோடு குறிக்கோளில் ஊன்றிநின்று தூது வந்தாள்; வெற்றிபெற்ருள்; மேலும் மேலும் தொடர் வெற்றி சேர்ப்பதற்குத் தொடர்ந்து சென்ருள்