உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 7ון குதிகொண்டு பாய்கின்ற வழிகள் முற்றும் கும்மென்று புழுதியெழப் பரியிரண்டும் மதியொன்று கதிரொன்று முன்னும் பின்னும் வான்முகிலின் கூட்டத்தைக் கடத்தல் போலே அதிவேக மாய்ச்செல்லும் காட்சி கண்டே அங்கங்கே ஊர்வழியில் நின்ற மக்கள் இதியாரோ எனவியந்து பார்த்தி ருந்தார் இளஞ்சிங்கக் குட்டிகள்போல் பாய்ந்து சென்ருர். தாமரையும் முத்தப்பன் தானும் அங்கே தஞ்சைக்குக் கான்வழியில் விரையும் போது காமருவும் அப்பதியின் வடபுறத்தே கடுகிவரும் போர்முரசின் ஒசை கேட்டே பாமரர்கள் ஓடிவந்தார்; சிற்றுார் மக்கள் பசுக்கூட்டம் பகைகொள்ளப் பதைத்து நின்ருர்; சீர்மருவு மன்னர் பிரான் செய்தி கேட்டுத் திணவெடுத்த படைதிரட்ட ஆணை யிட்டார். அண்டைஅயல் உள்ள சிற் றரசர்க் கெல்லாம் அணிவகுத்துப் ப்டைதிரட்டி வாரீர் என்றே கொண்டபோர்ச் செய்தியினைத் தாங்கி தாவும் குதிரைகளில் தூதுவர்கள் விரைய லானர். சண்டைவந்த தெனக்குருதி துடிது டிக்கச் சாதுரியங் காட்டவொரு தருண மென்ன முண்டாவைத் தட்டிக்கொண் டிளேஞ ரெல்லாம் முன்னேற்றச் சிந்திசைத்துக் குழும லானர். வடநாட்டான் ஆணவத்தால் தஞ்சைக் குள்ளே வருகின்ருன்; முதுகெலும்பை ஒடித்துப் போட்டு விடமாட்டோம் தூங்குகின்ருேம் எனும்நி னைப்பா வெறுங்கோழைக் கூட்டமென்றே எண்ணி GG. —12–