உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனெழுவீர் எனமுரசு முழக்கிக் கொண்டே ஊர்ப்புறத்தும் நகர்ப்புறத்தும் உள்ளா ரெல்லாம் வெடவெடெனப் புலிகளெனப் பாய்ந்து வந்தார் வெற்றிமகள் அவர்தோளில் நடன மிட்டாள்! வேற்படையும் வாட்படையும் முன்னே செல்ல விற்படையும் மற்படையும் தொடர்ந்து செல்லக் காற்றெனவே பரிப்படையும் யானை தேரும் கடகடென விரைந்தோட வடக்கு நோக்கிக் கூற்றத்துக் கிரைபோடும் ஆற்ற லார்போல் கொடிபிடித்து முரசடித்து முழக்க மிட்டு மேற்செல்லும் பெரும்படைக்குத் தலைவ ளுக வீரமிகு புயங்கன்தான் விளங்கி ேைன! போர்க்களத்தே வடபுறத்தார் காத்தி ருக்கும் புலிகளைப்போல் நின்றிருந்தார்; புயங்கன் வீரர் ஆர்ப்பரித்துப் பாய்ந்தார்சிங் கங்கள் போலே! அடடாபோர் தொடங்கிற்று முழக்கத் தோடே! யார்விழுந்தார் யாரெழுந்தார் பார்க்கு முன்னே அடுத்துவந்தோர் மேல்விழுந்தார்; மலைந்து நின்ருர்; கூர் வாள்கள் மின்னலெனப் பளிச்சிட் டாடக் கொடுங்குருதிச் செம்புனலே மழையாய்ப் பெய்யும்: மற்புயத்தில் அம்புபட்டுக் குருதி பாய மலேந்திருக்கும் பகைமார்பில் வாளைப் பாய்ச்ச அற்புதமாய்ப் பீறிட்ட குருதி வந்தே அத்துடனே கலந்திழியக் கண்ட காட்சி குற்ருலத் தருவியிலே மழைபொழிந்து குருதிநிறம் பெற்ருேடல் போலி ருக்கும்! பொற்ருரான் திருப்புயங்கன் செய்த போரோ புதுமைதரும் வீரத்தின் விளக்க மாகும்!