உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 179 கார்மேகம் போலவரும் யானைக் கூட்டம் கண்பிதுங்க நாப்பிதுங்க மிதித்துப் போட்டு நேர்நின்று வாள்சுழற்றி நிற்போர்:தம்மை நிலையிழந்து கலைந்தோடச் செய்து, வெற்றிப் போர்முரசின் ஒலிக்கேற்பக் குதித்த காட்சி புவிமலைகள் பலகூடிக் களத்தில் நின்று தார்சூடி நடனமிடல் போலி ருக்கும் தளபதிநற் புயங்கனுறு களத்துப் போரில்! கொல்லென்றும் குத்தென்றும் கூவிச் சென்று குதிரைகளில் பாய்ந்துவரும் வீரர் கூட்டம் நில்லென்று தடைசெய்வார் யாரும் இன்றி நீண்டுவரும் வேற்கூட்டம் வாளின் கூட்டம் வில்லம்பின் டங்கார ஆர வாரம் வெற்றிமகள் விளையாட்டின் வீர நாதம் எல்லையிலே தஞ்சைப் போர்க் களமி தித்த எதிர்வடவர் குருதியின்மேல் எழுந்த தம்மா! மணிதோறும் களத்துாதர் வந்து சொன்ன மகிழ்வெற்றிச் செய்திகளைக் கேட்டுக் கேட்டுப் பணிதோறும் பணிதோறும் முத்து மாலை பரிசளித்துக் கொண்டிருந்தார் தஞ்சை மன்னர். தணியாத ஆர்வத்தால் வெற்றி கூட்டும் தளபதியாம் புயங்கனுக்கு முல்லைப் பெண்ணுள் மணமாலே சூட்டுவதே பரிசாம் என்று மனந்திறந்து களிப்போடு சொல்லி நின்ருர்! வடபுறத்துப் படையெல்லாம் போர்க் களத்தில் மாய்ந்தொழியப் பெரும்புயங்கன் வெற்றி கொண்ட திடமனத்துப் படையோடு திரும்பு கின்ருன் சென்றழைத்து வாபொன்னப் பாவென் முேதிக்