பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நாச்சியப்பன் கடமையிலே வென்றமகன் நகருக் குள்ளே கால் வைத்த அப்பொழுதே மகள்தி ருக்கை இடவேண்டும் மணமாலே என்று சொல்லி ஏற்பாடு செய்திருந்தார் தஞ்சை மன்னர். ஏவியநல் மன்னர் பிரான் கருத்துப் போலே எதிர்கொண்டு வரவேற்கச் செல்வான் போலே மேவியதோர் சூழ்ச்சிமிகு கருத்தி ைேடு விரைவாகப் பொன்னப்பன் புறப்பட் டானே. காவியம் போல் அழகுடையாள் முல்லைப் பெண்ணுள் கைநழுவிப் போகாமல் பற்றிக் கொள்ள வாவியதாம் உள்ளத்தோர் திட்ட மிட்டே வடபுறத்துக் கவன் உடனே புறப்பட் டானே! ஆர்ப்பரிப்பும் களிப்பாட்டும் முடித்து வீரர் அவரவர்தம் கூடாரம் பிரித்துப் போட்டும் போர்ப் பொருள்கள் சேகரித்தும் ஊர்தி ரும்பும் புறப்பாட்டிற் கேற்பாடு செய்தி ருந்தார். ஒர் பெரிய கூடாரம் தன்னில் சற்றே - ஒய்வெடுத்துக் கொண்டிடலாம் எனப்பு யங்கன் நார்க்கட்டில் ஒன்றின்மேல் படுத்தி ருந்தான் நனவுலகம் மறந்தே கண் அயர்ந்து விட்டான்! தான்வந்த புரவிதனைத் தொலைநிறுத்தித் தனியாகப் பொன்னப்பன் இறங்கிச் சென்ருன் ஏனென்று கேட்பதற்கோர் ஆளும் இன்றி எல்லாரும் வேலையிலே கருத்தாய் நிற்கப் பேனென்று கூந்தலுக்குள் நுழைந்தாற் போலே பின்புறமாய்க் கூடாரத் துட்பு குந்தான். வாளுென்று புகழ்பெற்ற புயங்கன் மார்பில் வாள்பாய்ச்சிக் கொலைசெய்து திரும்ப லாளுன்