பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 181 கொண்டதொரு சூழ்ச்சிதனை முடித்து விட்டுக் குபுக்கென்று வெளிப்பாய முயன்ற போது கண்டைெரு போர்வீரன் புகுதல்; அன்னே கைவாளால் அவன்மார்பில் தாக்கி விட்டுச் சுண்டெலிபோல் பின்புறமாய் நழுவிச் சென்று தொலை நிற்கும் புரவியின்மேல் ஏறி யாரும் கண்டறியு முன்பறந்தான் தஞ்சை நோக்கிக் கவலைதரு முகத்தோடு மன்முன் நின்ருன்! தயங்காமல் போரிட்டு வெற்றி நாட்டித் தஞ்சைநகர் மன்னர் பிரான் புகழு யர்த்தி வயங்கியதோர் மாவீரன்; மாற்ருர் நெஞ்சில் வடுப்பாய்ச்சும் அருஞ்செயலான்; வீரர் போற்றும் புயங்கனை எப் பகையாளோ கொன்று விட்டான் புல்லனிழி செயலாலே வெற்றிப் பாடல் இயங்குமுனம் துன்பஒலி கிளம்பிற் றையா என் நாவோ எடுத்துரைக்கத் தயங்கிற் றையா! உறங்குங்கால் இறந்தாலும் மார்பிலேதான் உயிர்பிரிக்கும் வாள்பாயும் பேறு பெற்ருன்; மறங்குலையா மாண்புடனே துறக்கம் சேர்ந்தான்; மன்னரவைத் தளபதியான்!பெருமை யேனும் அறங்குலையா மற்போரில் வீரங் காட்ட யாரினிமேல் அவன் போலே பிறப்பார்? வெற்றி நிறங்குலையா திருக்கையிலே துக்கம் வந்து நெஞ்சடைத்துக் கொண்டிங்கே தவிக்கு தையா! உடன்பிறந்தான் இறந்ததற்கு வருந்து வான்போல் ஒலமிட்டுப் பொன்னப்பன் நடித்த தெல்லாம் திடங்குலையா மன்னரவர் கண்டு நெக்குத் திகழ்கின்ற தன்னைப்போல் எண்ணிக் கொண்டார்.