உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நாச்சியப்பன் அடலேறு போல் நின்ற புயங்கன் தன்னே அடைந்தால்தன் மகள் வாழ்வு சிறக்கு மென்றே தொடராகக் கொண்டிருந்த எண்ணத் தாலே - துரயவனின் இழப்பவர்க்கோர் அதிர்ச்சி யாச்சே! நெடுநாளாய்த் தம்நெஞ்சில் முல்லைக் கேற்ற நேயத்தான் புயங்கனெனக் கருதி வந்தார்; அடுபோரில் அவன் வெற்றி பெறுவா னென்றே அசையாத உறுதியுடன் இருந்து வந்தார்; படுபாவி எவனேசெய் பாத கத்தால் படைவென்றும் புகழ்கொண்டும் திரும்பு முன்னே கொடிதாகக் கொலையுண்ட செய்தி கேட்டுக் குமுறலொடு பதைப்புண்டு சோர்ந்து போளுர்! சோர்வுற்ற அந்நிலையில் அவர்க்கோர் எண்ணம் சுழன்றுவரத் தம்நினைப்பை மறைத்தி டாமல் தேர்வுற்ற சூழ்ச்சியினல் வாழ்வுப் பாதை திருப்பிவரும் பொன்னப்பன் தன்னி டத்தே கூருற்ற கத்தியிடம் கையை நீட்டும் குழந்தையெனச் சொல்லிவிட்டார்! நெஞ்சுக் குள்ளே பீறிட்ட மகிழ்ச்சிதனை மறைத்துக் கொண்டு, - 'பெருந்தயவுக் காட்பட்டேன்’ என்று ரைத்தான்! அருமைமகள் முல்லையைநான் புயங்க னுக்கே அளிப்பதென ஒருமுடிவு செய்தி ருந்தேன்; பெருமைபெறு வீரனவர் மடிந்த தாலே பிறர்வீட்டுக் கனுப்புதற்குப் பிடிக்க வில்லை; உரிமையுடன் கேட்கின்றேன் பொன்னப் பாநீ ஒப்புக்கொள் வாயென்றே நம்பு கின்றேன்; பிரியமனம் ஒப்புகிலேன் ஆகை யாலே பேதைமகள் தனமணந்திங் கிருக்க வேண்டும்!