பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 183 தயங்காமல் புயங்கனைப்போய்க் கொன்ற தாலே தளிர்க்கொடியாள் எளிதாகக் கிடைத்து விட்டாள்; மயங்காமல் பிழைசெய்து முடிப்ப வர்க்கே w மனக்கருத்து நிறைவேறும் எனக்க ருத்தில் பயங்கொள்ளா வீரன்போல் எண்ணிக் கொண்டு பசப்புமொழி பலபேசி ஆணை மீறத் தயங்கியவன் போற்காட்டி ஒப்புக் கொண்டான் தனவெறுத்து மறுத்தாளை நினைக்க வில்லை! போர்முடிந்து படையெல்லாம் வந்த பின்னே புயங்கனுக்கு நினைவுக்கல் நட்ட பின்னே சீர்மிகுந்த அரண்மனையில் மணக்கால் நாட்டித் திருவிருந்து பொலிந்ததென வாயில் தோறும் தோரணங்கள் தொங்கலிடவீதி தோறும் தோகையர்கள் கோலமிட வாழை கட்டிப் பேரரசர் சிற்றரசர் யாவ ருக்கும் பேருமையுடன் அழைப்பனுப்பி வரவேற் ருரே! இத்தனையும் பார்த்துக்கொண் டிருந்தாள் முல்லை ஏதோஒர் துணிச்சலுடன் பொறுத்தி ருந்தாள்: புத்தியின்றி மன்னவரும் மேலும் மேலும் பொன்னப்பன் வயப்பட்ட சூழல் எண்ணிச் சித்தத்தில் துயர்கொண்டாள்; காலம் எண்ணிச் சிறிதேனும் கலங்காமல் காத்தி ருந்தாள். குத்தவல்ல கத்தியொன்றை இடையில் வைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சாத குலத்துப் பெண்ணுள்! பொன்னப்பன் பேசவரும் போதி லெல்லாம் பொற்கொடியாள் வலக்கையோ இடுப்புக் கோடும் மன்னர்க்கு வேண்டியளுய் இருந்து விட்டால் மகளைத்தான் அடைந்திடலாம்; அவள்வி ருப்பம்