பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நாச்சியப்பன் என்னென்று தெரிந்தாலும் என்னும் போக்கில் இருக்கின்ற தீயவனின் நிழலைக் கூட மின்னனையை முல்லைப்பெண் வெறுத்தி ருந்தாள்! மீறிவரும் காலம்வரை பொறுத்தி ருந்தாள்! மாமல்லன் புயங்கனையே முல்லைப் பெண்ணுள் மனம்சிறிதும் விரும்பாத போதும், மன்னர் தாமெண்ணி இருந்தபடி முடிப்ப தற்கே தளராமல் நாடோறும் பேசி வந்தார். கோமகளோ முத்தப்பன் மீது காதல் கொண்டிருந்தாள்; மனமாறும் தந்தைக் கென்றே பாமரர்போல் நம்பிக்கை கொண்டி குந்தாள் பாதகளும் பொன்னப்பன் இடைப்பு குந்தான்! நாளைக்குத் திருமணமாம்! காலைப் போதில் நடக்குமென எல்லாரும் களித்தி ருந்தார்; வேளைக்கு வேளையெழில் கூடும் வண்ணம் விழாக்கோலம் நகர் முற்றும் பெருக்கி நின்ருர்! பாளைக்கு நிகரான சிரிப்புக் காரி படபடக்கும் நெஞ்சுடனே காத்தி ருந்தாள்! நாளைக்கு வருவேன்நான் என்று சொல்லி ஞாயிறுபோய் மலைப்பின்னே ஒளிந்து கொண்டான்! இருட்டிவரும் நேரத்தில் இரண்டு பெண்கள் எழிலான பூக்கூடை தூக்கி வந்தார் விரட்டுகின்ற காவலர்கள் தடுக்க வில்லை; விரைவாகப் போய்வாரீர் எனப்பணித்தார்: விருட்டென்று பாய்கின்ற வேகத் தோடே - வேல்விழியாள் முல்லையறை தேடிச் சென்ருர்; குருட்டுப்பெண் போலேகண் மூடிக் கொண்டு குந்திக்கொண்டிருந்தாள்ஒர் கட்டி லின்மேல்!