உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 185 என்னென்ன சிந்தனையோ நெஞ்சரங்கில் எத்தனையோ திட்டங்கள் தப்பிச் செல்ல மின்னல்பல தொடர்ந்ததெனத் தோன்றித் தோன்றி விடியுமுனம் தன்வாழ்வு விடிவை நோக்கி இன்னலுடன் இருந்தவளின் செவியில் சற்றும் எட்டவில்லை எதிர்நின்றே அழைக்கும் ஒசை அன்னமயில் தாமரையாள் அருகில் சென்றே அவள்தோளைத் தட்டி,"இள வாசி' என்ருள். 'வந்திருப்பார் யாரென்று பாரீர்” என்ன வடிவழகி கண்திறந்தாள்; கூடைப் பூவும் முந்தானைச் சேலையுமாய் எதிரில் நின்று முறுவலிக்கும் பெண்முகத்தில் அரும்பு மீசை வந்திருக்கும் காரணத்தை எண்ணு முன்னே “வந்துவிட்டீர் களா?' என்று பாய்ந்து தாவிச் சுந்தரத்தோள் தனைத்தழுவி நின்ருள்: கொண்ட துன்பமெலாம் பறந்திடப்பே ரின்பம் கொண்டாள். பூக்கூடை தூக்கிவந்த தாம ரைக்குப் புறத்தொதுங்கி நடந்துவந்த மற்ருெ ருத்தி மாக்கோல மிடுகின்ற மங்கை யல்லள் மணக்கோலந் தரவந்த காத லன்பன் ஏக்கோடு வீற்றிருந்த முல்லைப் பெண்ணின் இதயத்தில் மகிழ்வேற்றும் அன்பு முத்தன் நோக்காலே கலந்துயிரில் பின்னி விட்ட நூன்முடிச்சு பிரிக்கொண்ணு அன்புச் சிக்கல்! உடனே நாம் புறப்படுதல் வேண்டு மென்ருள் உடனிருந்த தாமரையாள்; உலகு ணர்ந்தார்; படபடக்கும் நெஞ்சுடனே உடைதி ருத்திப். பண்புமிகும் இளவரசி முல்லைப் பெண்ணுள்