பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நாச்சியப்பன் உடனடியாய் மனத்துக்குள் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டவளாய் அறைப்பு றத்தில் நடந்துசெல்லும் ஒருபெண்ணை அழைத்துக் கோயில் நான்போக ஒருவண்டி கொணர்க” என்ருள். வண்டிவந்து விட்டதென்ற செய்தி கேட்டு வண்ணமயில் முல்லையுடன் தாமரையும் ஒண்டிவந்த பூக்காரப் பெண்ணும் சென்றே உட்கார்ந்த வுடன்வண்டி கோயில் நோக்கித் தொண்டர்மனம் ஆண்டவனை நாடு மாப்போல் தோகைமனம் காதலனைத் தேடு மாப்போல் வண்டுமலர் நாடுதல்போல் விரைந்த தம்மா! வாழ்வுநலம் தேடிடுவார் தம்மோ டங்கே! அப்போதோர் படைவீரன் உள்து ழைந்தான்; அரசர்தமைச் சந்திக்கும் விருப்பம் சொன்னன் தப்பாதே உள்ளழைத்து வருக வென்ருர் தஞ்சைநகர் ஆளுகின்ற செஞ்சொல் வேந்தர் இப்போது நான்தனியாய்ப் பேச வேண்டும் என்றவன்தான் உரைத்திடவே உடனி ருந்தார் கப்பென்று வெளிச்சென்ருர்; பொன்னப் பன்தான் கல்போலே அசையாமல் அங்கி ருந்தான்!

  • எல்லாரும் போய்விட்டார்; நீ சொல்” லென்றே இயம்புகின்ற அரசர் முகம் நோக்கி வீரன் செல்லாமல் இருக்கின்ற பொன்னப் பன்தன்

திசைநோக்கி வாய்திறவா நிலையைக் கண்டே, :சொல்லவந்த கருத்தைநீ சொல்லப் பாளன் சுடர்க்கொடிக்கு மாப்பிள்ளை இவன்தா னப்பா நல்லதற்கும் தீயதற்கும் துணையிருக்கும் நம்பிக்கைக் குரியவன்தான் சொல்லாய்” என்ருர்,