உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 187 "மன்னவரே தங்களிடம் சொல்ல வந்த மறைபொருளைத் தனியாய்த்தான் சொல்ல வேண்டும்; என்னநிலை யுள்ளவரும் உடனி ருந்தால் யான்பேச இயலாது மன்னி யுங்கள்” தன்னிலையைப் பெரிதாகக் கருதிக் கொண்டு தளராமல் பொன்னப்பன் இருந்த போதில் 'என்ன இவன் பெரிதாகச் சொல்ல வுள்ளான் எழுந்துநீ வெளிச்செல்வாய்” என்ருர் மன்னர். குறிப்பறிந்து நடக்காத கொள்கைக் காரன் கோபங்கொண் டவனுக வெளியில் சென்ருன் பொறுப்புடனே வந்தபடை வீரன், "வேந்தே, புயங்கனுடன் தாக்குண்ட சிங்கன் என்பான் நெறிப்பட்ட மருத்துவத்தால் மீளா னுகி நீங்குகின்ற நிலையினிலே உள்ளான் ஏதோ குறிப்பிட்ட செய்தியொன்றைச் சொலத்து டித்துக் குற்றுயிராய்க் கிடக்கின்ருன்’ என்று சொன்னன். 'பொன்னப்பன் உடனிருக்கும் போதில் ஏதும் புகலாதே எனத்தடுத்தான் அந்தச் சிங்கன்; மன்னரென்னைக் காணவரும் செய்தி கூட மாப்பிள்ளை அறியாமல் நடக்க வேண்டும்; இன்னபடி மன்னரிடம் கூருப் என்றே இயம்பியுள்ளான்” என்றுரைத்தான் வீரன், மன்னர் தன்னிகரில் புயங்கனுயிர்த் தோழன் சிங்கன் தன்னையுடன் பார்ப்பதற்கு விரைய லானர். உடன்செல்லப் பொன்னப்பன் ஒடி வந்தான் ஒருபொழுதில் திரும்பிடுவேன் இருப்பாய் என்றே தடைவிதித்து வந்தவனைத் தொடர்ந்து சென்ருர் தகையுடையான் சிங்கனுள்ள மனையைத் தேடி!