உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நாச்சியப்பன் நிந்திக்கும் பேச்சுகளும், குசுகு சுப்பும் நீக்கமற எவ்விடத்தும் பரவி நிற்க விந்தைக்கு மேல்விந்தை கால மாற்றம்! விடிவதற்குள் என்னுமோ? என்ருர் பல்லோர். முல்லைதனை அழைத்துவரச் சென்ருர் கோயில் முன்வாசற் புறத்திருக்கும் வண்டி கண்டார். வல்லையினும் காத்துள்ளேன் என்று சொல்லி வண்டிசெலுத் துபவன்கொட் டாவி விட்டான் தொல்லையிது தொல் லையெனச் சொல்லிக் கொண்டே கோயிலுக்குள் தேடிவெளி வந்தார்; என்ன சொல்லுவது மன்னவருக் கெனம லைத்துத் துயரத்தோ டவர்முன்னே சென்று நின்ருர். இல்லையெனச் சொல்லுவதற்கா இங்கு வந்தீர்? எங்கிருந்தா லுந்தேடிக் கொண்டு வாரீர்! செல்லமகள் காதல்நிலை யுணரார் ஆகிச் சீற்றத்தோ டிருந்தமன்னர் ஆணை யிட்டார்! நல்லவன்போல் பொன்னப்பன் நடித்த போது நம்பித்தான் செய்ததெலாம் எண்ண எண்ண வல்லமையும் வீரமுங்கூர் மதியிருந்தும் வகையற்ருேன் போலான நிலையைக் கண்டார்! தஞ்சைமன்னர் முகம்போலச் சிவந்தி ருக்கும் தன் முகத்தைக் கீழ்த்திசையில் காட்டிக் கொண்டு நஞ்சை நிலப் பயிர்க்குமுலாம் பூசித் தங்க ஞாயிறுமன் புறப்பட்டான், மணவி ருந்தும் செஞ்சொற்பாக் கூத்தனைத்தும் சுவைக்க வென்றே திரண்டுவந்த மக்களெலாம் ஏமாற் றத்தோ டஞ்சுகுரல் கொண்டவராய்ச் செய்தி பேசி அவரவர்தம் ஊர்களுக்குத் திரும்ப லானுர்!