பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 191 'மாப்பிள்ளை சிறைப்பட்டான்; காண வில்லை மணமகளை' என்று மொரு செய்தி தன்னக் கூப்பிட்டுப் பேசிடுவார் வீட்டுக் குள்ளே கூட்டமிட்டுத் தெருக்களிலும் பேசி நின்ருர் தோப்புகளில் சிற்றுார்கள் உழும்வ யல்கள் துரப்புகளில் கிணற்றடியில் குளக்க ரையில் காப்புடைய சிறைக்கூடத் தன்னில் கூடக் காணுகின்ற பேரெல்லாம் பேசி நின்ருர்! காவிரிப்பூம் பட்டினத்தில் பாய்வி ரித்துக் கடல்காற்றுத் தள்ளுகின்ற கப்பல் ஒன்றில் பூவிரியும் முகத்தாளாம் முல்லைப் பெண்ணும் புதுக்கருத்துக் கொண்டவனம் முத்தப் பன்னும் தாவியெழும் அலைக்கூட்டம் சிரித்துப் பொங்கித் தவழ்ந்திருக்கும் அழகுதனைப் பார்த்துக்கொண்டே காவியமும் ஓவியமும் கைகோத் தாற்போல் கடாரத்துக் கேகினர் காத லார்ந்தே! சிங்காத னம்பொலிய வீற்றி ருந்து செங்கோலை நடத்துகின்ற ஆற்றல் மிக்கார் மங்காத புகழ்வாய்ந்த தஞ்சை மன்னர் மகள்முல்லை மலர்நெஞ்சை யுணரா ராகிப் பொங்கோல மிட்டிருக்கும் கடலைப் போலே பொருமிக்கொண் டிருக்கின்ருர்; மொட்டு விட்ட தங்காதல் பூவிரியக் கடாரம் நோக்கித் தளராத அன்புடையார் ஒருங்கு சென்ருர்! சூதாடி வென்றவரும் சூழ்ச்சியிலே வென்றவரும் வாதாடி வென்றவரும் வாழ்ந்து சிறந்ததில்லை; நல்ல மனமுடையார்; நல்ல செயலுடையார் வெல்லுவதே வைய விதி.