பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நாச்சியப்பன் கண்டனர் பத் தாயிரம்பேர் மறியல் செய்து கடுஞ்சிறைக்குள் அண்ணலுடன் செல்ல, நெஞ்சில் எண்ணினராய் நிற்கும்நிலை கண்டார் அங்கே இடமில்லை சிறைக்குள்ளே வெளியில் விட்டார்! காதலனின் நெஞ்சுவக்கத் தொண்டு செய்யும் கற்புடையார் நாகம்மை யம்மை யாரும் மாதரிடம் வீரமுண்மை காட்ட வென்றே மாநிலத்தில் பிறந்ததங்கை கண்ணம் மாளும் மோதிவரும் ஆர்வத்தால் இவர்கள் பின்னே முன்னேறும் பெண்ணினமும் கள் ஒழிப்பை ஆதரித்த ஈரோட்டுத் தாத்தா தம்பின் அணிவகுத்துக் கிளர்ச்சிசெய்தார்! பணியைச் செய்தார்! திருவாங்கூர் வைக்கத்தில் தெருவில் நாயைத் திரியவிட்டுத் தமிழர்களில் ஒருவ குப்பை வரக்கூடா தெனக்கட்டு வைத்தி ருந்தார், மனம்புழுங்கி மலையாளத் தலைவ ரெல்லாம் ஒருபுரட்சி தொடங்கிடவும், சாதிப் பித்தம் ஓங்குமுளத் திருவாங்கூர் அரசாங் கத்தார் வருங்காலம் நினையாமல் தலைவ ரெல்லாம் வாடத்தம் சிறைக்கூடத் தடைத்துப் போட்டார். நாட்டுநலம் கருதியஅத் தலைவ ரெல்லாம் நன்ருய்த்து தொடங்கிவிட்ட தொண்டு செய்யக் கேட்டெழுதி ஈரோட்டிற் காள னுப்பிக் கிளர்ச்சியினைத் தொடர்ந்துசெயப் பணித்த போதில் வீட்டில்வயிற் றுக்கடுப்பால் படுக்கை தன்னில் விழுந்திருந்த அண்ணலவர் எழுந்து வேண்டும் மூட்டைகட்டி நிாகம்மை யாரைக் கண்டு முடிந்தது நோய் என்றுரைத்தார்! வைக்கம் வந்தார்!