உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 197 ஈவேரா வைக்கத்தில் தலைமை ஏற்ருர் இவர் வீட்டில் பலமுறைகள் தங்கி டில்லி போவாரவ் வரசர்அதை நினைத்துப் பார்த்துப் போய்விருந்திற் கழைக்கவெனப் பணிக்கக் கண்டித் நாவேந்தர், "தீமைக்கோ? புரட்சிப் போரை நடவாமல் தடுப்பாரோ?' என்று மக்கள் கூவாமல் நினைக்குங்கால், அண்ணல் நன்றி கூறியதி காரிகளை யனுப்பி வைத்தார்! உரிமைக்குப் போராடத் தொடங்கி விட்ட உடனவரைச் சிறையிட்டார்! பின் நாகம்மை திரு. ராம நாதனுடன் வைக்கம் வந்தார் சிலநாளிற் சிறைப்பட்டார் இராம நாதன்! பெருவாரிப் பெண்களுடன் அம்மை யார்தாம் பெருங்கிளர்ச்சி செய்யுங்கால் ஈரோட் டண்ணல் ஒருமாதம் சிறையிருந்து விடுதலைப் பட் - டுர்விட்டு வெளியேறப் பணிக்கப் பட்டார்! வெளியேற்றச் சட்டத்தை மீறி மீண்டும் விளேத்தபெரும் புரட்சிகண்ட ஆட்சி யாளர் எளியாரின் உரிமைக்குப் பாடு பட்ட எம்பெரியார் தமைச்சிறையில் ஆறுமாதம் துளியேனும் அருளின்றி அடைத்துப் போட்டார் தொண்டுக்குச் சளையாத நாகம் மையார் வெளிநின்று பெருங்கிளர்ச்சி செய்ய லானர் வெற்றிபெற்ருர் உரிமைபெற்ருர் தாழ்த்தப்பட்டோர்: தனித்தனியே பார்ப்பனர்க்கும் திராவி டர்க்கும் தமிழ்நாட்டுக் குருகுலத்தில் உணவளித்துத் தன் இனத்துக் குயர்வுதனை வ. வெ. சு. ஐயர் தழைக்கவைக்க முயன்றதல்ை பணங்கொடுக்க