உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நாச்சியப்பன் இனிமுடியா தென மறுத்தார் தந்தை. காந்தி இத்தவற்றைக் கண்டித்தும் ஐய ரோதாம் நினைத்ததுதான் சரியென்ருர்; பார்ப்ப ணியம் நீங்கும்வரை இழிவிருக்கும் என அறிந்தார்! தன்னலே யானவரை பார்ப்ப னியம் தனேயொழிக்க வழியாய்ந்தார் வகுப்பொவ் வொன்றும் முன்னேற வேண்டுமெனும் கொள்கை நாட்ட முதன்முதலில் குடியரசு தொடங்கி வைத்தார் தென்னுட்டார்க் கென்னென்ன தேவை என்று தெளிவாக ஆராய்ந்து மனுவின் நீதி சொன்னலும் வெட்கம்வரும் கம்பன் பாடல் சூழ்ச்சிசொலும் புராணங்கள் எரிக்கச் சொன்னர்! ஆரியத்தின் வைரி சாதிகள் நான்குண் டாக்கிச் சமத்துவக் கொள்கை நீக்கி வேதியப் பிழைப்புக் கண்டார் வீணர்கள் அவரின் போக்கை ஆதியில் மாடு மேய்த்திங் கடைந்தநாள் வரையில் ஆய்ந்து போதிய சான்று காட்டிப் புகன்றனர் ஈரோட் டண்ணல்! பார்ப்பனர் பேச்சை நம்பிப் பாழ்பட்ட தமிழ கத்தில் சூத்திர ராக மக்கள் துயர்ப்படும் தமிழ கத்தில் நாத்திக னென்றும் இந்த நாயக்கன் துரோகி என்றும் கூர்த்தறி யாதார் சொல்லக் கொஞ்சமும் அஞ்ச வில்லை!