உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 199 சாதியால் மதத்தால் பார்ப்பான் சதியினல் சேர்ந்த இந்து நீதியால் மூட பக்தி நிறைவினல் கெட்டி ருக்கும் போதிலே தன்மா னத்தைப் புகட்டுதற் கென்று வந்த சோதியாய் ஈரோட் டண்ணல் தோன்றினர் தமிழர் நாட்டில்! மக்களைப் பிரித்து வைத்த மயக்கிடும் சமயத் திற்கும் பக்கலில் நின்று பாட்டுப் பாடிடும் இந்நாள் ஆட்சி சிக்கென ஒழியு மாயின் சிறப்புண்டு நாட்டிற் கென்று தக்கவா றெழுதக் கண்டு சிறையினுள் தள்ளப் பட்டார்! ஆரியத்தின் வைரி யாகி அதனலாம் தீமை நீக்கப் போரியக்கும் வீரன்! எங்கள் பொன்னாட்டுத் தந்தை! மிக்க சீரியற்றித் தமிழ கத்தார் சிறப்புற வேதன் மானப் பேரியக்கம் கண்டோன்! நல்ல பெரியார் ஈரோட்டுத் தாத்தா! தமிழ்காத்த போராட்டம் தன் வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை வளமாக்கத் தகுஞ்செ யல்கள் நன் முற்றி நம்பெரியார் ஈ.வேரா முதுமைதனேக் கண்ட போதில்