பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 203 சென்னையிலே கடற்கரையில் மற்றுமொரு கடல்வெள்ளம் சேர்ந்த தேபோல் மின்னனைய மாதர்களும் ஆடவரும் இளைஞர்களும் மிகுந்த ஆண்டு சென்றவரும் தமிழகத்தார் எல்லோரும் சேர்ந்திருந்து செய்முழக்கம் நின்றுகடல் செய்த அலை ஒசையினும் பெரிதாக நிறைந்த தன்றே! எழுபதின யிரமக்கள் தமிழ்வாழ்க ஒழிக.இந்தி எனஒ லிக்கக் கிழவரவர் எனினுமொரு இளைஞரென முனைந்துதமிழ்க் கிளர்ச்சி செய்ய எழுந்தனர்.அங் கோர்மேடை தனிலேறி நின்ருரவ் ஈரோட் டண்ணல்! எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம் மனிதஉரு வெடுத்துக் கொண்டே! விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர் செயச்செய்த வீரப் பேச்சை; எழுந்துதமிழ்ச் சொற்களில்ை இளைஞர்களைத் தட்டிவிட்ட இலக்கியத்தைக் கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச் செயஅன்றே கொளுத்திவிட்ட செழுந்தமிழின் வீருர்ப்பைச் செவிமடுத்தோர் உணர்வடைந்தார்: சிங்க மாளுர்: தாய்மொழியைக் காப்பாற்றத் துடித்தெழுந்து கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள் ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார் சிறைக்கூடத் தடைத்து வைத்தார்