உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நாச்சியப்பன் 21 தாய் மொழியைப் போற்ருதான் தன்மானம் போற்ருதான் தாய் நாட்டைப் போற்ருதான் இம்மூவர்-ஆயுங்கால் வையப் பெரும்பகையாம் வந்தெதிர் நிற்பாரேல் நையப் புடைத்தலும் நன்று. 22 பழமையா லொன்றும் பயனில்லை யென்று முழக்கிவருஞ் சிங்கத்தை மூடச்-சழக்கரே நாத்திகனென் ருேதி நலங்கெடுப்பர் அன்ஞரின் வாய்த்தினவைப் போயடக்க வா 23 குளக்கரையில் ஆற்றில் குளிக்கச் செலுங்கால் அளக்கின்ற வம்பை மதிப்பார்-உளரோ குடும்பக் கலகத்தைக் கூட்டிவிடும் அல்லால் விடுதலைப்பேச் சாமோ விளம்பு. 24 தாழ்ந்தோன் இவனென்றும் தக்கான் இலையென்றும் ஆழ்ந்துநூல் கற்க அறைகின்ற-பாழான ஏடெல்லாம் செந்தியில் இட்டுக் கரியாக்க வாடா குதித்தோடி வா. 25 பொங்கலிட்டுத் தெய்வத்தைப் போற்றின் ஒருவர்க்குப் பொங்குவளம் சேருமென்ற புன்னினைவும்-தங்கையால் சேர்முயற்சி யில்லாமல் தெய்வங்காப் பாற்றுமெனும் ஒர்நினைவும் மூடர்க் குள.