உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 219 16 தூண்க ளிரண்டும் உயரம்வெவ் வேருயின் ஆண்டுத் தரத்தின் நிலையென்னம்-ஆண்களுடன் பெண்க ளிணையாகப் பேசப் படவிலையேல் மண்ணில் வாழ் வென்னும் மதி. 17 பெண்ணெருத்தி செத்தால் பிறிதொருத்தி தன்னையே கண்டு மணக்கின்ருன் காதலன்அப்-பெண்ணுே கொழுந னிறந்தபின் குந்திமூ லைக்கண் அழுவென்ருல் நன்ருே அது. 18 பொய்சொன்னர் நாக்குப் புழுத்தறியோம் ஆலுைம் மெய்சொன்னர் வையத்தில் மேன்மையினை-எய்துதலைப் பார்க்கின்ருேம் ஆதலினல் பார்மீதி லுண்மையினை வேர்க்கொள்ள வைப்போம் விழைந்து. - 19 உண்ணல் குறைத்தென் உழைப்பைக் குறைத்தாலும் எண்ணல் குறைக்க இயல்வதில்லை-மண்ணகத்தே எண்ணி வெளியிடுங்கால் ஏதுந் தடுப்பானைச் சுண்ணத்திற் போட்டுச் சுடு. . 20 தன்மொழியிற் பற்றில்லா தானை யுலகெல்லாம் புன்மொழியால் தூற்றும் புவிமீதில்-அன்னேன் பெரும்பார மாவான் பிறருந்தாம் நம்பற் கருகதை யற்றவனங் காண்,