உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நாச்சியப்பன் 31 வையத்தில் பிச்சையென வந்தொருவன் நில்லாமல் செய்யும்நாள் வையத் திருநாள்.ஒர்-தையல்தன் மைந்தன் பசித்தால் மனம்பதைப்பாள் எண்ணுத சிந்தையதோ மாக்கடவுள் செப்பு. 32 நெற்பயிரைப் போல நிறமுருவம் கொண்டாலும் புற்கொண்டு மிக்கபசி போக்கிடவே-நற்குழந்தாய் யாரால் இயலும் அறிஞர்களைப் போலவரு வாரால் பயனென் வரும். 33 ஊக்கமிலா நெஞ்சுபாழ் ஊட்டமிலா உண்டிபாழ் ஆக்கமிலாப் பேச்சில் அறிவுபாழ்-யாக்கும் அணியிலாப் பாட்டில் அழகுபாழ் பாழே துணிவிலா தான் வாய்த் துடிப்பு. 34 கற்றுத்தேர்ந் தோன்புகழ் கண்டக்கால் நெஞ்சுயர்த்தி உற்ற பெருமிதம் ஒன்றிற்கே-கற்குன்றும் சின்னக் கடுகாம்! சிறப்பா யவன் வழியைப் பின்தொடரும் இப்பே ருலகு. 35 ஊருக்குத் தானென் றுரைப்பின் அவ்வுரையைப் பேருக்கும் தன் வாழ்விற் பேணுதான்-யாருக்கும் நல்ல துணையல்லன் நாயிற் கடையனும் சொல்லின் மதிப்பையழித் தோன்.