உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 நாச்சியப்பன் 2. ஆடாய் ஆடாய் செங்கீரை நெஞ்சையள்ளும் சிரிப்புடனே நீளத் தவழ்ந்து வந்திங்கே பிஞ்சுக் கையும் முழங்காலும் பெரிதும் தேய நின்றபடி அஞ்சொல் மழலைத் திருவாயால் அப்பா அம்மா எனக்குழறிக் கொஞ்சி யாடாய் செங்கீரை குலுங்கி யாடாய் செங்கீரை! சின்னஞ் சிறிய செவ்வாயில் சிரிப்பு முத்துத் தோன்றிடவே கன்னக் குழியின் இருமுத்தும் கவலை போக்கத் தோன்றிடவே பொன்னின் உடலில் வியர்வையெனப். புதிதாய்ப் பலமுத் தரும்பிடவே அன்பே யாடாய் செங்கீரை அமுதே ஆடாய் செங்கீரை, இருகை தட்டி வருகவென இனிதுன் அப்பா அழைத்திடவும் - இருந்த அன்னை மடிவிட்டே இறங்கித் தவழ்ந்து விரைந்தாய்நீ திருவாய்க் கடையில் பாலொழுகச் சிரிக்கும் அழகே பசும்பொன்னே அருமைத் தமிழே செங்கீர்ை - ஆடாய் ஆடாய் செங்கீரை.