உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நாச்சியப்பன் 12. சிரித்துச் சிரித்துப் பறைகொட்டே இன்ப வாழ்வே எனக்களிக்க எழுந்த அன்பே செஞ்சுடரே அன்பு மகனே உன்கையில் அகப்பட் டிருக்கும் தட்டினிலே உன் சிறு கையால் அடித்தடித்தே ஓசை யெழுப்பிப் பறைகொட்டே அன்பு விளங்க இன்பமுற அடித்த டித்துப் பறைகொட்டே. உன்றன் முகத்தைப் பார்த்தாலே உள்ளக் கவலை பறந்தோடும் உன்றன் குறும்புச் செயல்கண்டால் உள்ளம் துள்ளி யெழுந்தாடும் அன்பு மணியே வாழ்வினிலே ஆசை வேண்டும் எனச்சொல்வி சின்னக் கையால் பறைகொட்டே சிரித்துச் சிரித்துப் பறைகொட்டே. கூடி யுள்ள சிறுவரெல்லாம் குதுாக லித்துத் தமிழ்ப்பாட்டுப் பாடித் தொடரப் பறைகொட்டிப் படைந டத்தும் தளபதியே! தேடிப் பெற்ற தெள்ளமுதே சின்னஞ் சிறுகைப் பறைகொட்டே ஆடிச் செல்லும் கண்மணியே அடித்த டித்துப் பறைகொட்டே.