பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 243 தையல் மலர்க்கொடி தடித்த புத்தகம் ஐந்தாறு கையில் அடக்கிக் கொண்டு, கட்டுச் சோருெரு கையிற் கொண்டு எட்டி நடந்தாள் எழில்நடை கொண்டே! கல்லூரி நோக்கிச் செல்லும் மலர்க்கொடிச் செல்வ மகளைச் சிந்தை பூ ரிக்கக் கண்டு பெற்றவள் களிப்புக் கொண்டாள்! உண்டோ அந்நாள் பெண்டிர் கல்வியும்! கண்டுபோற் பெண்கள் கல்வி கற்றுச் செண்டுபோற் புகழ்மணம் சிறந்து திகழும் காலம் வந்ததை எண்ணிக் களித்தாள்! ஞாலம் பெண்களால் ஆளப் படுதல் சீலம் அன்றென மூல நூல்கள் ஒல மிட்டது மாறி யிந்நாள் ஆளவும் பெண்கள் அரசியல் அரங்கில் நீள வந்தது நினைந்து மகிழ்ந்தாள். தாய்க்குலம் அரசியல் தலைமைமேற் கொண்டால் பேய்க்குணம் அகலும் பெரும்பெருஞ் சூழ்ச்சிகள் தவிடு பொடியாம்; தழைக்கும் அறமே! சுவடுஅறி யாமல் தீமை தொலையுமே. பெற்றவள் அறிவாள் பிள்ளைகள் அருமை! மற்றவள் பேதம் மக்களிற் காணுள்! நாயக மேற்று நாட்டை யாளும் தாயினத் தாலே தழைக்கும் உலகம்! கொஞ்சும் மக்களே குடிகள்என் றெண்ணி விஞ்சும் அன்பால் வேண்டும் பணிகளே ஆற்றுவாள் தாயே அதனுல் சான்ருேர் போற்றும் அரசியல் புவியில் ஓங்கும்.