உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நாச்சியப்பன் துச் செல்லப்பட்டாள் ஒர் அழகிய பெண். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தாவிப் பாய்ந்து ஆற்றில் நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றினன் ஓர் இளைஞன். காப்பாற் றிய அவனுக்கு நன்றி சொல்லுவதற்குப் பதிலாக, அவனைக் குற்றவாளியாக்கி விசாரணை நடத்தி அந்தப் பெண்ணைத் தொட்ட கையிரண்டையும் வெட்டித் தள்ள உத்தர விட்டது ஊர்ச் சபை. காரணம் அவன் ஒரு புலையன் என்பதே. காப்பாற்றப்பட்ட பெண் நான்கு வருணத்திலே மேல் வருணத்தைச் சேர்ந்தவள்; உயிருக்கு ஆபத்தான நிலையிலும் அவளை அவன் தொட்டது குற்றமாம். இது உண் மையில் நடந்த கதை. சோதிப் பெருமான் வருகையும் பிற சில நிகழ்ச்சிகளும் கற்பனை. பம்பாய்ப் பஞ்சாங்கம் இளந்தமிழன் 1973, மே இதழில் வெளிவந்தது. கண் மூடித்தனமான காதல் வேகத்திலே சில இளைஞர்கள் முன் னேற்றக் கருத்துக்களை நடைமுறைப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, தங்களைப் பெரிய புரட்சி வீரர்களாக மதித்துக் கொண்டு காதல் வாழ்க்கையிலே ஈடுபடத் தொடங்கி விடுகிருர்கள். மோகங் குறைந்தவுடன் சூழு வார் போதன்ைகளும் சூடேற்ற, பஞ்சாங்கம், காலபலன், ராசிபலன் போன்ற குருட்டுத் தனங்களும் அறிவை வெருட்ட, பிற்போக்குவாதிகளாய் மாறித் தங்கள் இன்ப வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிருர்கள். மூடக் கருத்துக் கள் குடும். வாழ்க்கையை எவ்வளவு தூரம் கெடுத்துவிட முடியும் என்பதற்கு இந்தச் சிறுகதை எடுத்துக்காட்டாக இருக்கிறது. உறுதியில்லாத நெஞ்சங் கொண்டவர்கள் முன்னேற்றங் காண முற்படுவது தன்னழிவையே உண்டாக் கும். குருட்டுத்தனங்களுக்கு அடிபணிகின்ற உள்ளங் கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் இன்ப வெள்ளத்தில்